ஆன்லைன் வேலை!
உலகின் எந்த மூலையிலிருந்தும், வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலம் வேலை செய்யலாம் வாங்க!.
மாதம் ரூ.35,000/- சம்பாதிக்கலாம்.
எளிதான காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்டிங்க், இமேஜ் எடிட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், சர்ச் ஜாப், ஈசி ஆபர் ஜாப், சிம்பிள் டாஸ்க் செய்வதன் மூலம் மாதம் ரூ.35,000 சம்பாதிக்கலாம்.
பார்ட் டைம் ஜாப்
ஆன்லைன் வேலை என்பதால், கிடைக்கும் சிறிய நேரத்தில் கூட இரவோ, பகலோ... வீடோ, அலுவலகம.. எங்கிருந்து வேண்டும் என்றாலும் செய்யலாம்.
பெண்கள் விரும்பும் பணி
வீட்டிலிருந்தப்படியே செய்வதால் பெண்களுக்கு இது மிகவும் உகந்தப் பணி. வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டே எளிதாக ஆன்லைன் வேலை மூலமாகவும் சம்பாதிக்கலாம்.
வாங்க, பணம் சம்பாதிக்கலாம்!
ஆன்லைன் ஜாப் பற்றிய பயிற்சி மற்றும் புதியதாக வரும் எளிய ஆன்லைன் ஜாப் என அனைத்தும் ஆன்லைன் மூலம் கற்றுத் கொள்வதுடன்... வேலைகளைச் செய்து தினம் தினம் பணம் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.
freeonlinejobs
10:27 AM
இணையத்தில் பல வகையான இலவச ஆன்லைன் ஜாப் தளங்கள் இருக்கின்றன. அவற்றில் சரியாக பணம் வழங்கும் தளங்கள் மிகவும் குறைவு தான் என்றாலும், சரியாகச் செயல்பட்டால் பண வருவாய் என்பது நமது உழைப்பிற்கு ஏற்ப கிடைக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
தொடர்ந்து செய்வது வரும் இணையதள பணிகளின் மூலம் அவ்வப்பொழுது பணத்தினைப் பெற்றுக் கொண்டிருப்பது தாங்கள் எல்லோரும் தெரிந்ததுதான். அந்த வகையில் இன்று நான் பெற்ற பண ஆதாரித்தனை உங்களிடையே காண்பிப்பதற்காக போட்டோக் காப்பி எடுத்து மேலே இணைத்துள்ளேன்.
இந்திய ரூபாயின் சரிவால், முன்பு 47 ரூபாய் என கால்குலேட் ஆனது, இன்று 64 ரூபாய் என கால்குலேட் ஆகி, 6 டாலர்க்கும் வருகிறது. இணைய வங்கி மூலம் பெற்றுக் கொள்வதில் பெரிதாக கமிஷன் ஏதுமில்லை. மேலும், தற்பொழுது நமது RBI, டாலர்களாக வாங்கிக் குவிக்க மேலும் ஊக்குவிக்கிறது. இதனை பேபால் சமீபத்தில் மெயில் வழியாக தகவல் கொடுத்தனர்.
பணத்தினைக் கொடுத்து டாலர் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, உழைப்பினைக் கொடுத்து டாலரினை வாங்குவது பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் 120 டாலர் பெற்றுள்ளேன். ஆனால், மீதமுள்ள 110 டாலர் என்னும் எனது வங்கிக்கு வந்து சேரவில்லை. வந்து சேர்ந்தவுடன், அதனையும் இப்பதிவிலேயே தங்களுக்குச் சொல்லிவிடுவேன். அதற்கு நடிவில் ஒர் 6 டாலர் பேஅவுட் வேற வர இருக்கிறது.
மாதந்தோறும் குறைந்தது 100 டாலர் முதல் 200 டாலர் வரை குவித்துவிட வேண்டும்... அதற்காக நான் தினமும் ஆர்ட்டிகள் எழுதிக் கொண்டே இருக்கிறேன்... அதன் மூலம் உங்களையும் உழைக்க ஊக்குவிப்பதோடு, உறுதியான வருவாய்க்கும் அடித்தளமாக வலைப்பூவினை அமைக்க கேட்டுக் கொள்கிறேன்... இதன் மூலம் விளம்பர வருவாயாக நிறைய சம்பாதிக்க முடியும். கொஞ்சம் சுமார்ட்டாக செய்தால் கூகுள் அட்சன்ஸையும் பெற்றுவிடலாம்/
எளிதான சர்வே ஜாப்கள் மூலம் பெற்ற பேமண்ட் ப்ரூப் போட்டோ காப்பியினை உங்களுக்காக இணைத்துள்ளேன். கடந்த 15 நாட்களில் 11 டாலர் பெற்றிருக்கிறேன்... மற்ற தளங்கள் போல், 50$ பேஅவுட்.... 100 டாலர் பேஅவுட் என்று இல்லாது மிகவும் குறைந்த பணம் இருந்தாலே பெற்றுக் கொள்ளலாம், என்பதால், 11 டாலரையும் மூன்று முறையாக வாங்கி... 350 ரூபாய் வங்கி எடிம் கார்டு மூலம் எடுத்து செலவு செய்தாச்சி....
உங்களுக்கும் இந்த ஜாப் செய்து சம்பாதிக்கணும்னு ஆசை இருந்தால், அவ்வப்பொழுது அப்டேட் ஆகும் ஆன்லைன் சர்வே டிப்ஸ்-ஐ தினம் தினம் வாட்ச் செய்யுங்கள் > தளம் > http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=28&t=6293

கடந்த இரண்டு வாரத்தில், இலவச ஆன்லைன் வேலை மூலம் நான் பெற்ற பணத்திற்கான ஆதாரங்கள். நீங்களும், இன்றே செய்ய ஆரம்பித்து, படுகையில் கோல்டன் மெம்பராகி மேலும் அதிகமாகச் சம்பாதியுங்கள்.

நய்யாண்டி- விமர்சனம்
1:39 AM
நடிப்பு: தனுஷ், நஸ்ரியா நஸீம், சூரி, ஸ்ரீமன், நரேன், பிரமிட்
நடராஜன், சத்யன்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதி: வேல்ராஜ்
தயாரிப்பாளர் : எஸ் கதிரேசன்
இயக்கம்: சற்குணம்
இப்போதெல்லாம் ஓரிரு படங்களிலேயே இயக்குநர்களின் 'ஸ்டஃப்' தீர்ந்து
விடுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது சற்குணத்தின் இயக்கத்தில்
வெளிவந்திருக்கும் நய்யாண்டி படம்!
களவாணி, வாகை சூட வா என முதலிரு படங்களிலும் வித்தியாசம் காட்டிய சற்குணம்,
நய்யாண்டியை இரண்டாம் தர இயக்குநர் ஒருவர் திக்கித் திணறித் தரும்
அறிமுகப் படம் மாதிரி தந்திருக்கிறார்.
ஹீரோ தனுஷைப் பொறுத்தவரை அவரது பட எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்ட இந்கப் படம்
உதவியிருக்கிறது என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை. ஆடுகளத்துக்குப் பிறகு,
பெரிய வெற்றிப் படம் எதையும் தமிழில் தனுஷ் தரவே இல்லை என்பதை நினைவில்
கொள்ளுங்கள்!
தனுஷ் போன்ற நடிகர்கள் கருத்து சொல்வதில் உள்ள கவனத்தை தனக்கான கதைத்
தேர்வில் காட்டினால் நன்றாக இருக்கும்.
இனி நய்யாண்டி படத்தின் கதை...
ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போகும் தனுஷ் அங்கு நஸ்ரியாவைப்
பார்க்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி காதல். ஆனால் நஸ்ரியா
முரண்டுபிடிக்க, தனுஷுக்குள் இருக்கும் 'ரொம்ப்ப நல்லவனை' கொஞ்சம் வெளியில்
விடுகிறார். ஒரு நாளிரவு பனைமரத்தில் கள்ளடித்துவிட்டு அப்படியே அடுத்த
மரத்துக்கு தாவுகிறார். இதை ஒளிந்திருந்து நஸ்ரியா பார்க்க, அடுத்த
காட்சியிலேயே கட்டிப்பிடித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு
நெருக்கடியான சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இப்போது சிக்கல், தனுஷின் திருமணமாகாத முதிர் அண்ணன்கள் ரூபத்தில். இவர்களை
வைத்துக் கொண்டு தான் திருமணம் செய்துகொண்டதைச் சொன்னால் சரியாக இருக்காதே
என்று, தன் வீட்டுக்கே நஸ்ரியாவை, அநாதைப் பெண்ணாக நண்பன் சூரி மூலம்
அனுப்பி வேலைக்கு சேர்த்துவிடுகிறார் தனுஷ்.
சில பல கலாட்டாக்களுக்குப் பிறகு, உண்மையைச் சொல்லி எப்படி
சுமுகமாகிறார்கள் என்பதுதான் நய்யாண்டி.
க்ளைமாக்ஸ் உள்பட பல காட்சிகள் ஏற்கெனவே பல படங்களில் பார்த்த மாதிரிதான்
உள்ளன. இந்த லட்சணத்தில் மூலக்கதை என ஒரு மலையாளப் படத்துக்கு கிரெடிட்
வேறு!
நய்யாண்டி- விமர்சனம்
தனுஷுக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. அப்பாவின் பாத்திரக் கடையில் வேலை,
நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டு, நஸ்ரியாவுக்காக மரம் விட்டு மரம்
தாவி, அடியாட்களுடன் சண்டை போட்டு... எதுவும் புதுசில்லை. கதைக்காக பெரிதாக
மெனக்கெடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தனுஷ், இப்படியொரு கதையைத் தேர்வு
செய்தது ஏன் என்று புரியவில்லை.
தனுஷால் சற்குணம் கெட்டாரா... சற்குணத்தால் தனுஷ் கெட்டாரா என்பது
அவர்களுக்கே வெளிச்சம்.
நஸ்ரியா... இந்தப் படத்தில் சுமாராகத்தான் தெரிகிறார். அதுவும் தனுஷுடன்...
ஆழாக்கும் ஒல்லிக்குச்சியும் மாதிரிதான் இவர்களின் பொருத்தம் உள்ளது.
மற்றபடி, சில காட்சிகளில் இயல்பான நடிப்பு தெரிகிறது (கடைசி காட்சி வரை
இடுப்புக்கு மேல் ஒரு துணி, அதற்கும் மேல் தலைப்பாகட்டு மாதிரி ஒரு துணி
சுற்றிக் கொண்டுதான் நஸ்ரியா வருகிறார். இதில் தொப்புளும், இஸ்லாமும் எங்கே
வந்தன என்றுதான் தெரியவில்லை!!).
ஸ்ரீமனும் சத்யனும் இடைவேளைக்குப் பின் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
நய்யாண்டி- விமர்சனம்
நஸ்ரியாவின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற பிரச்சினையில், எதற்கும்
சின்ன வண்டை கேளுங்கப்பா என ஸ்ரீமன் கூற, 'அவன் பச்ச மண்ணுடா' என பிரமிட்
நடராஜன் சொல்லும் காட்சியில், எல்லா குறைகளையும் மறந்து கலகலக்கிறது
தியேட்டர்.
தனுஷின் நண்பனாக வரும் பரோட்டா சூரிக்கு, ஒரே மாதிரி வேடம், ஒரே மாதிரி
டயலாக் என்றாகிவிட்டது.
அவ்வளவு பெரிய கோடீஸ்வரரான நஸ்ரியா அப்பா நரேன், ஒரு சுண்டைக்காய் வில்லன்
காலில் விழுந்து கதறுவதும், திருமணமாகி கர்ப்பமாகவும் உள்ள பெண்ணைப் போய்
தூக்கிக் கொண்டு வில்லன் பறப்பதும்... ம்ஹூம்.. முடியல!
நய்யாண்டி- விமர்சனம்
வேல்ராஜினி ஒளிப்பதிவு நன்றாகத்தான் உள்ளது. இந்தப் படத்துக்கெல்லாம்
எதுக்குங்க பாரின் ஸாங் என்று அவராவது இயக்குநரிடம் கேட்டிருக்கலாம்.
பாடல்கள் பெரிதாக நினைவில் இல்லை. பின்னணி இசை என்றெல்லாம் ரொம்ப
மெனக்கெடவில்லை ஜிப்ரான்.
தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர்... இருவருமே தங்களைத் தாங்களே
நய்யாண்டி செய்து கொள்ள இப்படியொரு படமெடுத்திருக்கிறார்கள் போல!
Subscribe to:
Posts (Atom)





























